• Jul 25 2025

தமிழ்நாட்டில் குறைவான வசூலைப் பெற்ற காந்தாரா… காரணம் என்ன தெரியுமா?

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

காந்தாரா திரைப்படம் கடந்த வாரம் உலக அளவில் நானூறு கோடி வசூலைக் கடந்தது. கே ஜி எஃப் இரு பாகங்களைத் தொடர்ந்து பான் இந்தியா அளவில் அதிகம் வசூலித்த கன்னடப் படம் காந்தாரா ஆகும். 


மேலும் நடிகர் ரஜினிகாந்த் காந்தாரா படத்தின் நாயகனும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டியின் நடிப்பையும் இயக்கத்தையும் வெகுவாக பாராட்டி இருந்தார்.


இந்தியா முழுவதும் உள்ள திரை பிரபலங்கள்,  பல அரசியல் பிரமுகர்கள் காந்தாரா திரைப்படத்தை பாராட்டினர். வெளிநாடுகளிலும் படம் நல்ல வசூலை பெற்றது. 


இந்தியா மற்றும் வெளிநாடுகளின் மொத்த வசூலை எடுத்துக் கொண்டால் பிற பகுதிகள் அனைத்தையும் விட தமிழ்நாட்டில் மிகக் குறைவாக 12.70  கோடிகளை மட்டுமே காந்தாரா வசூலித்துள்ளது. தமிழ்நாட்டை விட குறைவான திரையரங்குகள் உள்ள கேரளாவில் தமிழ்நாட்டை விட அதிகமாக 19.20 கோடிகளை வசூலித்துள்ளது.


மேலும் பிற மாநிலங்களில் காந்தாரா திரைப்படத்தை பாராட்டியே அதிக விமர்சனங்கள் வந்துள்ளன. மாறாக தமிழ்நாட்டில் காந்தாரா திரைப்படத்தின் வளமையான வணிக சினிமா காட்சிகளையும், ஆணாதிக்க காதல் காட்சிகளையும் விமர்சிக்கும் பதிவுகளையும், விமர்சனங்களையும் அதிகம் பார்க்க முடிகிறது.


இவையே காந்தாரா திரைப்படம் பிற மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாட்டில் அதிகம் வசூலிக்காததற்கு காரணம் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement