• Jul 24 2025

தமிழ் பேசும் நடிகையை அவமானப்படுத்திய இயக்குநர்- ரூம் போட்டு பேசிக்கலாம் எனக் கூறிய தயாரிப்பாளர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் விசி வடிவுடையன் இயக்கத்தில் நடிகர் ஜீவன், நடிகை மல்லிகா ஷெராவத், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர்  நடிப்பில் உருவாகியுள்ள படம் பாம்பாட்டம். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது.

அப்போது தன்னை மதிக்காமல் கதாநாயகி என்று அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று நடிகை சாய் பிரியா மேடையில் பேசியது தற்போது பெரும்  சர்ச்சையாகியுள்ளது. தமிழ் பேசும் நடிகையாக இருந்து தன்னை மதிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

அத்தோடு  இயக்குநரை பார்த்து, இந்த படத்தில் என்னை ஹீரோயின் சொல்லி தான் கமிட் செய்தீர்கள். ஆனால் என்னை கார்னர் செய்து வருவது எதற்கென்று தெரியவில்லை. பேர் போடும் இடத்தில் என் பெயர் காணாமல் போயுள்ளது.

மேலும் இப்படி பேசியிருந்த சாய் பிரியாவை பார்த்து தயாரிப்பாளர் கே ராஜன் ரூம் போட்டு வேண்டும் என்றால் பேசிக்கலாம் என்று சமாதானப்படுத்தியிருக்கிறார்.

இதன்பின் கடுப்பாகிய நடிகை சாய் பிரியா செய்தியாளர்களை சந்தித்து, நான் படத்தில் இளவரசி என்ன மறந்துட்டாங்க, என் பெயரை மிஸ் பண்ணிட்டாங்க என்று கூறியுள்ளார்.




Advertisement

Advertisement