• Jul 26 2025

'காந்தாரி' படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!- யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பயங்கரமாக இருக்கும் ஹன்சிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடித்து வரும் திரைப்படம் தான் “காந்தாரி.கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் ப்படம் எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹன்சிகாவுடன் இப்படத்தில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ‘ஆடிகளம்' நரேன், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது.


மேலும் இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை மசாலா பிக்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.அத்தோடு இதில் ஹன்சிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் முக்கியமாகும்.

அத்தோடு இப்படம் 2023 மார்ச் மாதம் வெளியாகவுள்ளது. மேலும் கண்ணன் இயக்கத்தில் ஜெயம்கொண்டான், கண்டேன்காதலை, சேட்டை, இவன்தந்திரன் போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement