• Jul 26 2025

நடிகை நயன்தாராவுக்கு ஜி.பி முத்து எழுதிய பாசமான கடிதம்- அடடே அவருடைய ஆசையே இது தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டிக்டாக் செயலி மூலம் பிரபல்யமானவர் தான் ஜி.பி முத்து. இவர் இதனைத் தொடர்ந்து  பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் காமெடி வீடியோக்களைப் பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.

இது தவிர தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டார். இருப்பினும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.  சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 


நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகர் ஜி.பி‌.முத்து அளித்துள்ளார். அந்த பேட்டியில் நடிகை நயன்தாராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "மதிப்பிற்குரிய நயன்தாரா அக்காவுக்கு பாசமாக எழுதும் ஜி.பி. முத்து. எனது ரொம்ப நாள் ஆசை, உங்க கூட ஒரு போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற வேண்டும் என மிகவும் ஆசைப்படுகிறேன். நீங்கள் சேலை கட்டி இருக்கும் போது உங்களை மிகவும் பிடிக்கும். இப்படிக்கு ஜி.பி. முத்து" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement