• Jul 25 2025

வருங்கால காதல் மனைவியுடன் ரொமன்ஸ் செய்யும் கௌதம் கார்த்திக்- அழகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் வரிசையில் உள்ளார். ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாக இணையத்தில் செய்திகள் பரவியது.

 

இதனை இருவரும் அண்மையில் உறுதிப்படுத்தினர்.இதை தொடர்ந்து இவர்களுடைய திருமணம், நவம்பர் 28 ஆம் தேதி... மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமண அறிவிப்பை வெளியிடும் விதமாக  நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.


அப்போது முதலில் காதலை சொன்னது யார்? என எழுபட்ட கேள்விக்கு முதலில் காதலை சொன்னது நான் தான் என ஒப்புக்கொண்ட கெளதம், நான் கூறிய பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தான் மஞ்சிமா பதில் கூறியதாக தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்திக்க வரும் போது இருவரும் ரொமாண்டிக்கான புகைப்படங்களை எடுத்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement