• Jul 23 2025

''மைக்கை கொடுத்துவிட்டு ஹன்சிகா பத்தி பேசுங்க''.. மேடையில் ரோபோ ஷங்கரை கலாய்த்த மாகாபா..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ரோபோ ஷங்கர் சமீப காலமாக சர்ச்சைகளில் அதிகம் சிக்கி வருகிறார். அவர் கிளி வளர்ந்து மாட்டிக்கொண்டு லட்சக்கணக்கில் அபராதம் கட்டியது, அதன் பின் உடல்நிலை மோசமாகி மெலிந்த தோற்றத்திற்கு மாறியது என அவரை பற்றி தொடர்ந்து பரபரப்பு இருந்தே கொண்டே இருக்கிறது.

மேலும் சமீபத்தில் ஒரு படத்தின் விழாவில் ஹன்சிகா பற்றி ரோபோ ஷங்கர் பேசியது பெரிய சர்ச்சைஆனது . மேடையில் இப்படி தான் ஆபாசமாக பேசுவீங்களா என பத்ரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் படக்குழு மன்னிப்பு கேட்டது.

இந்நிலையில் இன்று சினிஉலகம் நடத்திய Sound of Madras என்ற concert-க்கு ரோபோ ஷங்கர் வந்திருந்தார். அந்த ஷோவை தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்த் ரோபோ ஷங்கரை கலாய்த்து இருக்கிறார்.



மைக்கை கொடுத்துவிட்டு ஹன்சிகா பற்றி பேசுங்க என மாகாபா கூற, ரோபோ ஷங்கர் அதற்கு சிரித்துவிட்டு வந்துவிட்டார். 

Advertisement

Advertisement