• Jul 23 2025

'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் - அப்போ வாதம் சும்மா அனல் பறக்கப் போகுது..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். சந்திரலேகா என்ற படத்தில் மூலம் அறிமுகமாகிய சில படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.

அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள தமிழா தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ஆவுடையப்பன் நிகழ்ச்சி தொகுத்து வழங்க உள்ளார்.

இவர் தொகுத்து வழங்கும் முதல் எபிசோட் வரும் ஞாயிறு ( ஜூலை 16 ) மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே டிரைவர் ஷர்மிளா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆபீஸ் ஆக பேசிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. ‌

இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் தானும் பங்கேற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement