• Jul 26 2025

விஜய் டிவி பிரபலத்திற்கு கோல்டன் அதிஷ்டம்! வைரலாகும் புகைப்படங்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி திவ்யதர்ஷினிக்கு ஐக்கிய அரபு நாட்டின் கோல்டன் விசா கிடைத்து உள்ளதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.



ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்பட இந்திய திரை நட்சத்திரங்கள் பலருக்கும் கோல்டன் விசாக்களை அளித்து வருகிறது என்பதை அறிந்தும்,பார்த்தும் வருகிறோம். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி க்கு கோல்டன் விசா அளித்துள்ளது.



இந்த மகிழ்ச்சித் தகவல் குறித்து புகைப்படங்களை டிடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தனக்கு கோல்டன் விசா கொடுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் டிடி நடித்து வருகிறார் என்பதனை நாம் அறிந்த ஒன்றாகும்.சமீபத்தில் அவர் நடித்த ‘காபி வித் காதல்’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 



மேலும் டிடி திவ்யதர்ஷினி தற்போது ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ உட்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement