• Jul 25 2025

எல்லோர் முன்னாடியும் பாக்கியாவை அவமானப்படுத்திய இனியா- மகிழ்ச்சியின் உச்சத்தில் கோபி மற்றும் ராதிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா சமைக்கும் இடத்திற்கு வந்த பழனிச்சாமி பாக்கியாவுக்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுகின்றார். பாக்கியா மேடம் சமைக்க தெரியாதவங்க இல்ல, அவங்க பெரிய குக் ஏதோ சின்னத் தப்பு நடந்திடுச்சுங்க அதுக்காக இப்பிடியா பண்ணுறது கல்யாணத்தை நிறுத்தினால் அந்தப் பொண்ணோட மனசு என்ன பாடுபடும் என்று யோசியுங்க.


சாப்பாட்டு விஷயத்திற்காக எல்லாம் ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கலாமா என அவர்களை சமாதானம் செய்கின்றார். பழனிச்சாமி அவர்களுக்கு புரிய வைத்ததால் அவர்கள் கல்யாணத்தை நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்து விட்டனர். பின்னர் இனியா பற்றி பாக்கியா விசாரிக்கும் போது அவர் ஸ்கூல் பெஸ்ட் வந்திருக்கிறா என்று சொல்ல பாக்கியா மகிழ்ச்சியில் குதிக்கின்றார்.மறுபுறம் இனியாவுக்கு ஸ்கூலில் பாராட்டு விழா நடக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது காலணியிலும் பாராட்டு விழா நடைபெறுகின்றது.

அதில் பாராட்டு விழா நடத்தும் ஹவுஸ் ஓனர் பாக்கியாவைப் பற்றி குறையாக பேசுவதோடு கோபியையும் ராதிகாவையும் இனியாவோடு மேடையில் நிற்க வைக்கிறார். பின்னர் இனியாவுக்கு பரிசில் வழங்கி வாழ்த்துச் சொல்ல இனியா அவர்களுடன் வேர்ந்து போட்டோவும் எடுக்கின்றார். தொடர்ந்து பாக்கியா கல்யாண வீட்டுக்காரருக்கு திரும்பவும் பாயாசம் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்.


சமைத்து முடித்து விட்டு பாக்கியா, இனியாவைப் பார்ப்பதற்காக ஓடி வருகின்றார். அப்போது இனியா என் கிட்ட பேசாத டாடி நீங்க வந்ததற்கு ரொம்ப தாங்ஸ் என்று சொல்லி விட்டு கீழே வர கீழே வந்தும் பாக்கியா பேச வர இனியா என் கிட்ட பேசாத என எல்லோர் முன்னாடியும் அவமானப்படுத்தி விட்டுச் செல்ல அவர் பின்னாடியே எல்லோரும் போகின்றனர்.அப்போது ராதிகா இவர் தான் பழனிச்சாமியா என்று கேட்க அதற்கு கோபியும் இவர் தான் என்று சொல்கின்றார் இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement