• Jul 24 2025

அப்பாவைத் தொடர்ந்து மகனும் அரசியலில் நுழைந்து விட்டாரா?- நடிகர் அபிஷேக் பச்சனுக்கு ஏற்பட்ட புதிய பிரச்சினை- முற்றுப்புள்ளி வைத்த நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் 50 வருடங்களுக்கு மேலாக நிலைத்து நிற்கும் நடிகர் தான் அபிதாப் பச்சன்.இவருடைய மகனான அபிஷேக் பச்சனும் ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகின்றார்.

இவர் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் பாலிவூட்டில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது அபிஷேக் பச்சன் அரசியலில் குதிக்க இருக்கிறார் என தகவல் நேற்று பரவியது. அமிதாப் பச்சன் ஏற்கனவே சமாஜ்வாடி கட்சியில் இணைந்து எம்பி-யாக பதவி வகித்தவர். அவரது அம்மா ஜெயா பச்சனும் அதே கட்சியில் இணைந்து தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.


அமிதாப் மற்றும் ஜெயா பச்சன் இருவரும் அரசியலில் இருப்பதால் தற்போது அபிஷேக்கும் அவர்களை பின்பற்றி அரசியலுக்கு வருவதாக வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால் தற்போது அபிஷேக் அளித்து இருக்கும் விளக்கத்தில் அந்த செய்தி உண்மை இல்லை என கூறி இருக்கிறார். மேலும் அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement