• Jul 24 2025

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு போக முடிவெடுத்த கோபி -அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.அடுத்தடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறுஇருக்கையில் இதில் தற்போது விவாகரத்து சீன் நடந்து கொண்டு இருக்கின்றது.அதில் வீட்டுக்கு வரும் பாக்யாவை கோபி தகாத வகையில் பேசுவது நேற்றய எபிசோடில் காட்டப்பட்டு இருந்தது.

இந்த தொடரை பார்க்கும் ரசிகர்கள் மொத்த பேரும் கோபியை தான் திட்டி வருகிறார்கள். அந்த ரோலில் நடித்து வரும் நடிகர் சதிஷ் தற்போது தன்னை திட்டுபவர்கள் பற்றி பேசி இருக்கிறார். இது வெறும் நடிப்பு தான் என சொல்லி அவர் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

மேலும் கோபி வெளியிட்டு இருக்கும் வீடியோவில் தெரிவித்திருப்பதாவது…

பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்கிறது என பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள், அடுத்த 5 நாள் ரொம்ப மோசமாக இருக்க போகின்றது. தெரிந்தோ தெரியாமலோ கோபி கேரக்டர் மூலமாக உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் தயவு செய்துமன்னித்துவிடுங்கள். இது வெறும் நடிப்பு தான்.

எனக்கு தெரியும். சில பேர் என்னை வருத்தப்படவேண்டாம் என சொல்கிறீர்கள். திட்டுறவங்க திட்டட்டும்.. அது மெடல் மாதிரி என்றும் சிலர் கூறுகின்றனர்.

அத்தோடு இப்படி நடிக்கும்போது எனக்கே மனசு கஷ்டமாக இருக்கும். சீரியலை விட்டு போய்விடலாம் என்றும் தோன்றும். பாசிட்டிவ், சாஃப்ட் ஆன கேரக்டர் நடிக்கலாமென்று நினைப்பேன், ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் இல்லையா. அதனால் தான் தொடர்ந்து நடிக்கிறேன்.

இவ்வாறு நடிகர் சதீஷ் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Advertisement