• Jul 24 2025

'ராதே ஷ்யாம்'படவாய்ப்பைத் தவற விட்டு புலம்பி வரும் பூஜா ஹெக்டே- அடடே இதனால் தான் இப்படத்தில் நடிக்காமல் விட்டாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் பூஜாஹெக்டே.இவருக்கு இதனைத் தொடர்ந்து தெலுங்கில் படவாய்ப்புக்கள் குவிந்ததால் அங்கு பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.இதனால் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார்.

இருப்பினும் இவர் பிரபாசுடன் நடித்த 'ராதே ஷ்யாம்', விஜய்யுடன் நடித்த 'பீஸ்ட்' போன்ற படங்களும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வந்தார்.

அப்போது 'சீதா ராமம்' படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததால், அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இவருடைய கதாப்பாத்திரத்தில் தான் மிருணாளினி நடித்துள்ளாராம். அத்தோடு இப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விடர்சனங்களைப் பெற்று வருகின்றது.

இதனால் துல்கர் சல்மானுடன் நடித்து இருந்தால் இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன் என்று தனது நண்பர்களிடம் பூஜா ஹெக்டே புலம்பி வருகிறாராம்.இனி அப்படி ஒரு வாய்ப்பு வருவது கடினம் தான்'' என்று கூறி வருகிறாராம். இதனால் இவரது ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement