• Jul 24 2025

புதிய சீரியலில் இணைந்த கோபி..? அப்போ இனிமேல் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடிக்க மாட்டாரா..? கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற சீரியல் என்றால் அது 'பாக்கியலட்சுமி' தான். இந்த தொடரின் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள்.


அந்தவகையில் இந்த சீரியலில் கோபி என்ற வேடத்தில் நடித்துவரும் சதீஷ் பற்றி ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது சமீபத்தில் கேரளாவில் இருந்து சதீஷ் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் "நான் 3நாளாக கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்கேன், அதைப் பற்றி கொஞ்சநாள் கழித்து சொல்கிறேன்" எனக் கூறியிருந்தார்.


இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இனிமேல் வர மாட்டாரு எனப் பலரும் கூறி இருந்தனர். அதற்கு அவர் "அப்பிடி இல்லைங்க, முற்றுமுழுதாக என்னை சீரியலை விட்டுத் தூக்கல, என்னோட சீனை தான் குறைத்திருக்காங்க" கூறியிருந்தார்.

இதனையடுத்து இவரின் சீன்ஸ் அதிகளவில் குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் முதல் இருந்தளவு முக்கியத்துவம் தில் கோபிக்கு தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் கோபி சமீபத்தில் வெளியிட்ட அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், இவர் புது சீரியலில் நடிப்பதற்காக தான் கேரளா போய் இருப்பதாக கூறி வருகின்றார்கள். அதுமட்டுமல்லாது "இதற்கு அப்புறமாக நீங்க 'பாக்கியலட்சுமி' சீரியலில் நீங்க நடிக்கல என்றால் எங்களால் அந்த சீரியலைத் தொடர்ந்து பார்க்க முடியாது, உங்களுக்காத்தான் நாங்க நிறையப்பேர் அந்த சீரியல் பார்க்கிறோம்" என ரொம்ப கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.

எது எவ்வாறாயினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரைக்கும் சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement