• Jul 25 2025

“ஜிபி முத்து சொன்னாரு-குறும்படம் பாக்குறீங்களா?”-அசீம் - ஷிவின் இடையே வலுத்த வாக்குவாதம்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகி சென்ற  போட்டியாளர்கள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக் பாஸுக்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடின டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருந்தன.

அதன்படி, அசீமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என்றும் பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனிடையே, அசீம் தற்போது டாஸ்க்கை மீறி, யாருக்கும் தெரியாமல் மேக்கப் போட்டுக் கொண்டதாக போட்டியாளர்கள் குறிப்பிட்டனர். 


அதாவது பாத்ரூமில் அசீமுடைய Foundation இருந்ததாக தெரிய, அதனை அவர்தான் யாருக்கும் தெரியாமல் பயன்படுத்தி இருப்பார் என்றும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் தெரிவிக்கின்றனர். இதற்கு நடுவே ராபர்ட் மாஸ்டர் அசீமை மேக்கப் போட்டதாக குறிப்பிட, அவரிடம் ரச்சிதா பெயரை பயன்படுத்தி ஆவேசம் அடையவும் செய்தார். தேவை இல்லாமல் ரச்சிதா பெயரை பயன்படுத்தியதால் அசீம் மீது ராபர்ட் மாஸ்டரும் கோபம் அடைகிறார். இப்படியாக இந்த விவாதம் போக, பெரிய அளவில் சலசலப்பையும் அங்கே உண்டு பண்ணி இருந்தது.

இந்நிலையில் ஜிபி முத்து சொன்னதை பற்றி விக்ரமனுடன் சேர்ந்து சென்று அசீமிடம் ஷிவின் கேட்க, அதற்கு அசீமோ, “ஜிபி முத்து அவ்வாறு சொல்லவே இல்லை, அவர் சொல்லாமல் நீங்களாக ஏன் சொல்றீங்க?” என கேட்டு வாக்குவாதம் செய்ய, ஷிவினோ, “ஜிபி முத்து சொன்னாரு.குறும்படம் பாக்குறீங்களா?” என உரக்க சொல்கிறார்.இதனிடையே Sacrifice டாஸ்க் தொடர விருப்பம் இருந்தால் தொடரலாம் என்றும் இல்லை என்றால் பாதியிலேயே விட்டுவிட்டு விடலாம் என்றும் பிக் பாஸ் சொன்னது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement