• Jul 25 2025

அமுதவாணனைத் தொடர்ந்து மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாவது பைஃனலிட்டாக தேர்வாகியவர் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பெரிதாக எந்த டாஸ்கும் இல்லாததால், பிக்பாஸ் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் உள்ளே வருகை தந்துள்ளனர்.உள்ளே வந்த போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் 7 பேருக்கும் கடுமையான சேக்ரிஃபைஸ் டாஸ்க் கொடுத்தனர்.

இதில், விக்ரமன் ஒரு பக்கம் மட்டும் தாடி , மீசையை எடுக்க வேண்டும் என்றும் ஏடிகேவுக்கு தலை முழுவதும் மொட்டை அடித்துக்கொண்டு உச்சிதலையில் மட்டும் குடுமி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கதிருக்கு சட்டை மற்றும் பேட்டை கிழித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அசீமுக்கு சுடிதார் மற்றும் புடவை கட்டிக்கொள்ள வேண்டும் என்று சேக்ரிஃபைஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை அவர் செய்யவில்லை.


இதனை அடுத்து இன்று கமல்ஹாசன் எப்பிஷோட் என்பதால் அவர் ஹவுஸ்மேட்ஸிடம் தியாகம் என்றால் என்ன கூறி புரிய வைக்கின்றார். குறிப்பாக வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு ஒரு சின்ன கேம், வந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கார்டனில் உங்காருங்க, இந்த ஏழு பேரும் நீங்க என்ன தியாகம் பண்ணலாம் என்பதை முடிவு செய்து உங்களிடம் சொல்லுவார்கள் என்று கமல் சொன்னதும் அனைத்து ஆடியன்சும் கை தட்டி அதை வரவேற்றனர்.

இதையடுத்து பேசிய விக்ரமன் அன்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்றார். அவங்க அப்படி செய்துவிட்டார்கள் என்பதற்காக நாம் எதையும் செய்ய வேண்டாம் என்று மைனா கூறியுள்ளார்.இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மக்களின் வாக்குப் படி இரண்டாவது இறுதிப் போட்டியாளராக அசீம் தேர்வாகியுள்ளார் என வெளியாகியுள்ளது. முதல் போட்டியாளராக அமுதவாணன் தேர்வாகியிருப்பதும் குறிப்படத்தக்கது.

Advertisement

Advertisement