• Jul 24 2025

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முக்கிய பிரபலம்... கண் கலங்கி அழுத ஜிபி முத்து... வைரலாகும் ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதாவது இன்றுடன் 99ஆவது நாளினை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். 

மேலும் இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்கள் பலரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே தங்கி இருந்து நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் 3ஆவது சீசன் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் வருகை தந்துள்ளார். அதில் அவர் தான் ஒரு சீரியல் பண்ணுவதாக கூறுகின்றார். அந்த சீரியலில் நடிக்கும் ஒரு சில பிரபலங்களும் உள் நுழைந்து இருக்கின்றனர்.


அத்தோடு அந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ ஒன்றும் தற்போது காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது. அதனைப் பார்த்ததும் ஜிபி முத்து கண் கலங்கி அழுது விட்டார். அத்தோடு அந்த வீட்டில் அனைவரினதும் கண்களும் கலங்கி விட்டன. இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement