• Jul 25 2025

விஜய்யின் 'ரஞ்சிதமே... ரஞ்சிதமே..' பாடலுக்கு டான்ஸ் போட்ட பிக்பாஸ் ஜனனி: வைரல் வீடியோ

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.தற்போது  சீசன்6 இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது .இது இறுதிக் கட்டத்தை நெருங்கி 

இந்நிலையில் நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக பல்வேறு டாஸ்க்கள் பிக்பாஸால் கொடுக்கப்படுகின்றது. குறித்த டாஸ்க்களை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர்.



 இம்முறை பிக்பாஸ் வீட்டிற்கு இலங்கையிலிருந்து ஜனனி  போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார்.

இவர்கள் இருவரில் இறுதி வாரம் வரை பிக்பாஸ் வீட்டில் பயணிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் ஆரம்பம் முதலே தனது புன்சிரிப்பு  மற்றும் இலங்கை தமிழ் பேச்சாலும் பல இலட்சக்கணக்கானோரை  தன்வசப்படுத்திய ஜனனி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

இவ்வாறான நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜனனி தொடர்ந்தும் இந்தியாவிலேயே தங்கி வருகின்றார்.

இந்நிலையில் இடையிடையே போட்டோசூட்களை நடாத்தி அதனை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்.

தைத்திருநாளில் பட்டுச்சாறியில் ரஞ்சிதமே பாடலுக்கு க்யூட்டாக  ஆட்டம்போட்ட  வீடியோவை  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ஜனனியின் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.அதில் ஜனனி செம கியூட்டாக இருக்கிறார்.


Advertisement

Advertisement