• Jul 26 2025

உச்சிக்கருவாடு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜிபி முத்து... என்ன தலைவரே இதெல்லாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6ஆனது தற்போது இறுதிக் கட்டத்தை நெரும்கி வெற்றிநடை  வருகின்றது. இந்நிகழ்ச்சியானது ஜிபி முத்து, அமுதவாணன், ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர் மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பிரபலங்களுடன் 21 போட்டியாளர்கள் உள்ளடங்கலாக ஆரம்பமானது.

இதில் வித்தியாசமான டாஸ்க்குகள் பலவும் இடம்பெற்று வந்திருந்தான். அந்தவகையில் அனைத்து டாஸ்க்குகளையும் வென்று பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவர் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார் ஜிபி முத்து. 


அதுமட்டுமல்லாது ஜிபி முத்து இந்நிகழ்ச்சியில் உள்நுழைந்து ஒரு சில நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்து விட்டார். இறுதியில் டைட்டில் வின்னர் கூட ஜிபி முத்து தான் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தன் மகனைப் பார்க்க வேண்டும் எனக் கூறி அந்நிகழ்ச்சியிலிருந்து இடையிலேயே வெளியேறி சென்று விட்டார்.


ஜிபி முத்து நகைச்சுவை நிறைந்த பல வீடியோக்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவர் தற்போதும் பெண் வேடமணிந்து 'உச்சிக் கருவாடு ஊற வைச்ச சோறு.." என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கின்றார்.  


இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன தலைவரே இதெல்லாம் எனக்கேட்டு கலாய்த்து வருவதோடு அந்த வீடியோவை அதிகளவில் ஷேர் செய்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement