• Jul 25 2025

சக மனிதரை மதிக்கத் தெரிந்த தோழரை அடையாளம் காட்டியதில் மகிழ்ச்சி- கதறி அழுத விக்ரமன்- சுவாரஸியமான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடைசி கட்ட பரபரப்பான சூழலில் சென்று கொண்டிருக்கிறது, டைட்டில் வின்னருக்கான இறுதிப் போட்டியில் 6 பேர் விளையாடி வந்தனர்.விக்ரமன், ஷிவின், அசீம், கதிர், அமுதவாணன், மைனா ஆகிய 6 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்த நிலையில் கதிர் பண மூட்டையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்து டைட்டில் வின்னர் ரேஸில் இருந்த 5 பேருக்கு பிக் பாஸ் பணப் பெட்டியுடன் இன்னொரு வாய்ப்பு கொடுத்தார்.பணப் பெட்டியின் வேல்யூ அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், 13 லட்சம் வந்ததும் அமுதா பஸ்ஸர் அடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பணப் பெட்டியில் இருந்த 13 லட்சம் ரூபாய் பணத்துடன் அமுதவாணன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம்.

அதன்படி இன்று வெளியான ப்ரோமோவில் விக்ரமன் காடர்ன் ஏரியாவுக்கு வருகின்றார்.பிக் பாஸ் வீட்டில் இதுவரை அவர் விளையாடிய புகைப்படங்களுடன் நடுவில் இருக்கும் ஸ்டேஜில் நிற்க வைத்து அவரை புகழ்கிறார்.அதாவது பிக்பாஸ் சக மனிதரை மதிக்கத் தெரிந்த தோழரை அடையாளம் காட்டியதில் மகிழ்ச்சி என்று கூறுகின்றார். இதனால் விக்ரமன் அழுகின்றார். இதோ அந்த ப்ரோமோ







Advertisement

Advertisement