• Jul 25 2025

எதிர் நீச்சல் சீரியலில் ஒரு நாளைக்கு மட்டும் குணசேகரனுக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'எதிர்நீச்சல்' சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

 கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைகளுடன், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி எத்தனையோ திரைப்படங்கள் உலக சினிமாவில் வெளியாகி வந்தாலும், சீரியலுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இல்லத்தரசிகள் மத்தியில்  தற்போது வரை இருந்து வருகிறது.

குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து விதவிதமாக சீரியல்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், அது ஏற்கனவே பார்த்த கதையாக இருந்தாலும், சிலர் ஒரு நாள் கூட தவறவிடாமல் சீரியல்களை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். மேலும் இப்படிப்பட்ட இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது பல சீரியல்கள் உருவாகி வருகின்றது.

 எனினும் அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்' ஆணாதிக்கம் மிகுந்த ஒரு குடும்பத்தில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பற்றி பல்வேறு திருப்புமுனைகளோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.


மேலும் இந்த சீரியலில் நடிகர் மாரிமுத்து வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை கனிகா நடித்து வருகிறார். கதாநாயகியாக மதுமிதாவுக்கு, நாயகனாக சபரி பிரஷாந்தும் நடித்து வருகின்றனர். அத்தோடு, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, கமலேஷ், விபு ராமன், சத்யப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதுவரை நன்றாக படித்த பெண்களை திருமணம் பல பொய் சொல்லி திருமணம் செய்து, திருமணம் முடிந்ததும், அவர்களை சமயலறையில் வேலை செய்ய வைத்த குணசேகரனை, எதிர்த்து நிற்கிறார் கடைசி தம்பியை திருமணம் செய்து கொண்டு வந்துள்ள ஜனனி. அத்தோடு  தன்னை போல் தங்களுடைய கனவை தொலைத்து விட்டு, அடிமை போல் இருக்கும் மற்ற மருமகள்களையும் காப்பாற்ற ஜனனி துணிந்து செய்யும் சில விஷயங்கள் இந்த சீரியலின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்துள்ளது.

பல்வேறு திருப்புமுனைகளோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்கள் குறித்த சம்பளம் தற்போது வெளியாகியுள்ளது. குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்து ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 20,000 சம்பளமாக பெறுவதாக  சொல்லப்படுகின்றது.

Advertisement

Advertisement