• Jul 26 2025

அந்த மனசு தான் கடவுள்.. G.P. முத்துவை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..அப்பிடி என்னதான் நடந்தது..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்துவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர்.மேலும்  இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது.  டிக்டாக் செயலிக்கு பின்னர் பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அத்தோடு அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் G.P. முத்து என்பது குறிப்பிடத்தக்கது


எனினும் தற்போது சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜி.பி. முத்து தனது நண்பரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய போட்டோவுக்கு மலர் மாலை அணிவித்து, பழ வகைகள், இனிப்பு வகைகள் வைத்து அசைவ உணவுகளான பிரியாணி, கறி குழம்பு, கறி வறுவல் ஆகியவற்றை படையலாக படைக்கும் காட்சியை பகிர்ந்துள்ளார். எனினும் தற்போது இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.






Advertisement

Advertisement