• Jul 26 2025

என்னை மட்டும் கேட்காதீங்க….அதுக்கு தான் செல்வா இருக்கிறாரு...தனுஷ் அண்ணி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணனும், குருவுமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் இப்படப்பிடிப்பு நடந்தபோது தனுஷும், மூத்த மகன் யாத்ராவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது. அதன் பின்னர் அண்ணனும், தம்பியும் சேர்ந்து எடுத்த புகைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது.

இவ்வாறுஇருக்கையில் நானே வருவேன் பட அப்டேட் கொடுக்குமாறு செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியிடம் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் செம க்யூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கீதாஞ்சலி தெரிவித்திருப்பதாவது….

அவர்கள் வேலை செய்தபோது நான் சேட்டை செய்து கொண்டிருந்தேன் என்றார்.மேலும் அந்த வீடியோவுக்கு லைக்ஸுகள் வந்து குவிந்துவிட்டது.

அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டீங்க, அப்படித்தானே அண்ணி. ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை முடிந்துவிட்டதா என்று மட்டும் சொல்லுங்க ப்ளீஸ் என்று தனுஷ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தன் மாமனார் கஸ்தூரி ராஜாவின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் கீதாஞ்சலி. எனினும் அதற்காக ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement