• Jul 25 2025

மருத்துவரை பார்த்து சிகிச்சை பெறுங்கள்-தனுஷின் மனைவிக்கு இப்படியொரு பிரச்சனையா..? வருத்தத்தில் ரஜனி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்ச்சத்திரமாக விளங்கும் ரஜனியின் மூத்த மகளாக திகழ்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.இவர் காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார் .

பெரும்பாலும் தன் ஒர்க்அவுட் மற்றும் சைக்கிளிங் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றார்.

அவ்வப்போது தன் மகன்களுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களையும் வெளியிடுகிறார். அத்தோடு முக்கியமாக காபி குடிக்கும்போது எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை தான் அடிக்கடி வெளியிடுகிறார்.

மேலும் அவர் தன் சந்தோஷத்திற்காக ட்வீட் செய்கிறார், இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுகிறார். ஆனால் அவர் விளம்பரம் தேட இப்படி செய்வதாக சமூக வலைதளவாசிகள் விமர்சிக்கிறார்கள்.

இந்நிலையில் தன்னுடன் சேர்ந்து சைக்கிளிங் வரும் நண்பர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்தினார்.

அது இணையத்தில் வைரலாக அதை பார்த்தவர்களோ, தனுஷை பிரிந்த பின்னர் மன அழுத்தத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா. அந்த பிரச்சனையால் தான் இப்படி நடந்து கொள்கிறார். முறைப்படி மருத்துவரை பார்த்து சிகிச்சை பெறுங்கள். உங்களை நினைத்து அப்பா ரஜினி கவலையில் இருக்கிறார் என கூறியுள்ளனர்.

அத்தோடு மன அழுத்தம் சாதாரண விஷயம் அல்ல ஐஸ்வர்யா. உடனே அதற்கான சிகிச்சை பெறுங்கள் என்று சமூக வலைதளவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement