• Jul 24 2025

திருமணம் முடிந்த இரண்டே நாளில் பொது இடத்திற்கு கணவருடன் ஜாலியாக வந்த ஹன்சிகா- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கோலிவுட்டில் ஹீரோயினாக கலக்கிய நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த மாதம் தனது காதலனை அறிமுகப்படுத்தினார்.பாரிஸில் உள்ள ஈஃபில் டவர் முன் காதலனுடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கு திருமணம் நடைபெற உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஹன்சிகா.

அதன்படி ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் டிசம்பர் மாதம் 4ம் திகதி மிகவும் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது.ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் தான் திருமணம் நடந்தது.


இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.மேலும் திருமண கொண்டாட்டம் நிறைவு பெற்று இருக்கும் சூழலில் ஹன்சிகாவுக்கு உடனே ஹனிமூன் செல்லும் திட்டம் எதுவும் இல்லையாம். சில வாரங்களுக்கு ஷூட்டிங் வேலைகள் இருப்பதால் அதில் தான் அவர் கவனம் செலுத்த இருக்கிறார். 

 இந்நிலையில் ஹன்சிகா மற்றும் அவரது கணவர் முதல் முறையாக பொது இடத்திற்கு வந்திருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரல ஆகி வருகிறது.அப்போது பத்ரிகையாளர்கள் ஹனிமூன் பற்றி கேட்க ஹன்சிகா வெட்கப்பட்டு சிரித்துவிட்டு சென்றிருக்கிறார்.இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement