• Jul 26 2025

நயன்தாராவைத் தொடர்ந்து அந்த விஷயத்தில் இறங்கிய ஹன்சிகா-லேடி சூப்பர் ஸ்டாரையே முந்திட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனது பிசினஸ் பார்ட்னரும், நண்பருமான சொஹைல் கதூரியாவை ஹன்சிகா காதலித்து வந்ததோடு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்ட டிசம்பர் மாதம் 4ம் திகதி திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்தது.

இந்நிலையில் தான் அந்த திருமண வீடியோ ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.ஹன்சிகா தன் திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது தவிர்த்து வீடியோ எதையும் வெளியிடவில்லை. வீடியோவை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திடம் கொடுத்துவிட்டார். 


இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோ விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் ப்ரோமோ வீடியோவுடன் தெரிவித்துள்ளது.ப்ரோமோ வீடியோவில் ஹன்சிகா சிவப்பு நிற உடையில் மிகவும் அழகாக உள்ளார். என் வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலான ஒன்று நடந்திருக்கிறது. எனக்கு திருமணமாகிவிட்டது. என் திருமணத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

 அந்த நிகழ்ச்சியின் பெயர் லவ், ஷாதி என ஹன்சிகா சொல்ல, டிராமா என ஒரு ஆணின் குரல் கேட்கிறது. இல்லை இல்லை இது லவ், ஷாதி என ஹன்சிகா மீண்டும் சொல்ல டிராமா என அந்த ஆண் குரல் மீண்டும் ஒலிக்கிறது. இது டிராமா இல்லை. கட் பண்ணுங்க, நான் எடிட்டை பார்க்கணும். ஹன்சிகா காண்டாகி கிளம்புவதுடன் ப்ரோமோ வீடியோ முடிந்துவிட்டது.


ஹன்சிகாவுக்கு முன்பு நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. அந்த திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று அறிவித்தார்கள். ப்ரொமோ வீடியோ கூட வந்தது. ஆனால் திருமண வீடியோ இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோ வரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement