• Jul 26 2025

நம்பவே முடியல, ரொம்பவே அருவருப்பா இருக்கு-அபர்ணா பாலமுரளிக்கு நடந்த விஷயம்-கடும் கோபத்தில் மஞ்சிமா மோகன்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அபர்ணா பாலமுரளி கேரளாவில் உள்ள சட்டக் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் தனது புதிய படமான தங்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினருடன் சென்றிருந்தார். அப்போது மேடை ஏறிய கல்லூரி மாணவர் ஒருவர் நடிகை அபர்ணா பாலமுரளியின் தோளில் கை வைக்க முயன்றது அது பிடிக்காமல் அவர் விலகி சென்ற வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.


அபர்ணா பாலமுரளிக்கு பிடிக்காமல் அங்கிருந்து விலகி சென்ற நிலையில், அவரது தங்கம் படக்குழுவினர் மற்றும் கல்லூரி ஆசிரியர் அந்த மாணவரை கண்டிக்காமல் விட்டது ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. பலரும் இது தவறான செயல் என்றும் அந்த மாணவனுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கொந்தளித்து வருகின்றனர்.


இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த நடிகை மஞ்சிமா மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்து 'Unbelievable and disgusting!' என நம்பவே முடியல, ரொம்பவே அருவருப்பா இருக்கு என மாணவரின் செயலை வன்மையாக கண்டித்து இருக்கிறார் மஞ்சிமா மோகன்.

அபர்ணா பாலமுரளி நடிகர் பிருத்விராஜ் உடன் இணைந்து நடித்த காப்பா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. அடுத்ததாக அவர் நடித்துள்ள தங்கம் திரைப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்திற்கான ப்ரோமோஷனுக்காகத்தான் சட்டக் கல்லூரி விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


நடிகைகள் என்றாலே மாணவர்கள் மத்தியிலும் தவறான கண்ணோட்டம் இருப்பதினால் தான் இப்படி பூ கொடுத்து விட்டு தோளில் அனுமதி இல்லாமல் கை போட்டு விடலாம் என அந்த கல்லூரி மாணவர் நினைத்து விட்டார் என்றும் அவரது தகாத செயலுக்காக தக்க தண்டனை அவர் அனுபவிப்பார் என்றும் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement