• Jul 24 2025

ஹன்சிகா திருமணத்திற்குப் பின்னர் நடிப்பாரா..? இல்லையா..?. இதோ அவரே கூறிய பதில்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா. இவரிற்கு அடுத்த மாதம் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. அதாவது இவர் சோஹைல் கதூரியா என்பவரை வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளார். 


இவர்கள் இருவரினதும் திருமணம் ஆனது ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் நடைபெற உள்ளது. இவ்வாறாக திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்துகொண்டிருக்க மறுபுறம் திருமணத்திற்கு பின்னர் ஹன்சிகா, சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா அல்லது நடிப்புக்கு முழுக்கு போடுவாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து வந்தது. 


இவர்களின் கேள்விக்கு ஹன்சிகாவே ஓப்பனாக பதிலளித்து உள்ளார். அதாவது ஹன்சிகா நேற்றைய தினம் தனது வருங்கால கணவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். அப்போது ஈஃபில் டவர் முன் சோஹைல் தனக்கு புரபோஸ் செய்வது போல் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். 

இந்நிலையில் தனது திருமணம் குறித்து ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருகின்றார். அதில் தான் திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்பதை திட்டவட்டமாக ரசிகர்களுக்கு குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement