• Jul 25 2025

எங்ககிட்ட சொல்லிட்டு தான் போயிச்சு அதை தான் பண்ணிட்டு இருக்கு- ஆயிஷாவின் தந்திரம் பற்றி கூறிய சத்யா சீரியல் பிரபலங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. 23 நாட்களைக் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளளர்.சாந்தி மாஸ்டர் மற்றும் அசல் எலிமினேட் ஆகி வெளியேறினார்கள்.

ஆனால் ஜி.பி முத்து தனது பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த வீட்டை விட்டு வெளியேறினார். அத்தோடு தொடர்ந்து பல்வேறு விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்ட வருவதால் போட்டியாளர்கள் உத்வேகத்துடன் விளையாடி வருகின்றனர்.


அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் முக்கிய போட்டியாளர் தான் ஆயிஷா. ஆரம்பத்தில் இவர் நல்ல ஸ்ரோங்கான போட்டியாளர் என்று பார்க்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவர் ஹவுஸ்மேட்ஸ்களிடம் நடந்து கொள்ளும் விதம் கமல் சேர் முன்னாடி நடந்து கொண்ட விதம் அனைத்தும் பார்வையாளர்களையும் கடுப்பாக்கியுள்ளது.

இந்த வாரம் நாமினேஷில் கூட இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இவருடன் சத்யா சீரியலில் நடித்து வரும் இரு நண்பர்கள் பேட்டி ஒன்று கொடுத்துள்ளனர்.அதில் அவர்கள் ஆயிஷா பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.அதாவது ஆயிஷா பிக்பாஸ் போகும் போதே சொல்லிட்டு தான் போன எனக்கு எந்த விதமான ஸ்ராட்டஜியும் இல்ல நான் இங்க எப்பிடியோ அதே மாதிரி தான் பிக்பாஸ்ல இருக்கப்போறேன் என்று மேலும் அவ ரொம்ப கலகலப்பான பொண்ணு அவ  வீட்டுக்குள்ள போய் மச்சான் என்று கூப்பிட்டப்போவே என்னை மச்சான் என்று கூப்பிடாதீங்க என்று சொல்லி ஓஃவ் பண்ணிட்டாங்க அதனால பயம் வந்திருச்சு அவளுக்கு என்ன சொன்னா எப்படி எடுத்துக் கொள்ளுவாங்களோ என்ற பயம் தான்.


அவ ரொம்ப பஃன் காரெக்டர் ரொம்ப ஜாலியா இருப்போம். கிரிக்கெட் விளையாடுவோம்.பிஃரண்ஸை விட்டுக் கொடுக்கமாட்டா என்றும் கூறியுள்ளனர்.அத்தோடு வீட்டுக்குள்ள இருக்கிறப்போ ஒழுங்கா இருந்து விளையாடிட்டு வா நாங்க இருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement