• Jul 24 2025

ஹப்பி பர்த்டே பா ...தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த துருவ் விக்ரம்..! லைக்ஸினை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

துருவ் விக்ரம் கோலிவுட்டில் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அதன் பிறகு தந்தையுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று மிருகத்தனமாக ரெடியாகிக் கொண்டிருக்கிறார் துருவ் விக்ரம்.



இந்நிலையில் விக்ரம் இன்று தனது 57வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார். இதனை சிறப்பிக்கும் வகையில்  படக்குழு நேற்றைய தினம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. இதனையடுத்து இன்று காலை மற்றுமோர் புதிய அப்டேட் வெளியானது. 

அந்தவகையில் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் காட்சிக்கு தயாராவது, பா.ரஞ்சித் காட்சியை விளக்குவது, செட் போடும் பணிகள் உள்ளிட்ட பல இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாளிலே துருவ் விக்ரம் தனது  இன்ஸ்டராகிராமில் தானும்,தந்தையும் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு Happy birthday Pa ❤️ என தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து லைக்ஸினை குவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement