• Jul 23 2025

சத்தியராஜுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்த சிவகுமார்-கடைசில சீரியலுக்கு வந்ததுதான் மிச்சம்!..

stella / 2 years ago

Advertisement

Listen News!

சுய ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாகத் திகழும் நடிகர் என்றால் தமிழ் சினிமாவில் நம் நினைவுக்கு வரும் முதல் நடிகர் சிவகுமார். எடுப்பான தோற்றம், வசீகரிக்கும் முகம் என சினிமாவிற்கு இருக்கும் அத்தனை தகுதிகளோடும் சினிமாவிற்குள் வந்தார்.சினிமாவிற்கு சென்றால் கெட்டுப் போய் விடுவாய் என்று அவரது தாய் வருந்தியதற்கு பின்னனி காரணம் அவரின் வயது. ஆனால் மிகவும் கட்டுக் கோப்பாக இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சிவாஜி, ஜெமினி படங்களில் துணை நடிகராக தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார்.

முதன் முதலில் முருகன் வேடம் அணிந்து தான் தன் கெரியரை ஆரம்பித்தார் . அப்படியே படிப்படியாக வளர்ந்து ஒரு உன்னதமான ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று பல படங்களில் கதா நாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.இவர் பீக்கில் இருக்கும் போது தான் சத்யராஜும் வாய்ப்பு தேடி கோடம்பாக்கம் வந்தார்.


சிவக்குமாரும் சத்யராஜும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் சிவகுமார் நடிக்கும் ‘ தீர்ப்புகள் தீர்க்கப்படலாம்’ என்ற படத்தில் ஒரு சைடு ஆக்டர் வாய்ப்புக்காக அந்த படத்தின் இயக்குநரான பாஸ்கரிடம் சிவகுமார் சிபாரிசு செய்திருக்கிறார்.

அதன் மூலம் படத்தில் வாய்ப்பு வந்திருக்கிறது சத்யராஜிற்கு. தொடர்ந்து வில்லன், இரண்டாவது ஹீரோ என்ற கதாபாத்திரங்களில் நடித்த சத்யராஜிற்கு 90களில் தான் பெரிய பெரிய ஹிட் படங்கள் அவரை தேடி வந்தது. அமைதிப்படை, வால்டர் வெற்றிவேல் என ஒரு ஆக்‌ஷன் படம் சத்யராஜின் வாழ்க்கையை திருப்பிப் போட்டிருக்கிறது.


இந்த நிலையில் சத்யராஜ் ஹீரோவாக நடித்த படமான ‘மலபார் போலீஸில்’ சிவக்குமாருக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. சத்யராஜ் ஹீரோ சிவக்குமார் ஒரு மூன்று காட்சிகளில் வருவது போன்ற சீன். அப்போது தான் சிவக்குமாருக்கு புரிந்ததாம் ‘சத்யராஜ் 0 லிருந்து ஆரம்பித்து 100க்கு போயிருக்கிறார், நாம் மறுபடியும் 0 வுக்கே வந்துவிட்டோமே’ என்று நினைத்து அதன் பின் தான் சீரியலுக்கு வந்தாராம் சிவக்குமார். இந்த தகவலை சிவகுமாரே ஒரு பேட்டியில் கூறினார்.


Advertisement

Advertisement