• Jul 24 2025

உடல் எடையைக் குறைக்க ஆபரேஷன் செய்திருக்கின்றாரா?- நெட்டிசன் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த ஹன்சிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான்  ஹன்சிகா மோத்வானி..தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர். இவர் தமிழில் விஜய், சூர்யா, சிம்பு, கார்த்தி, ஜெயம் ரவி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 


கடந்த ஆண்டு தன்னுடைய குடும்ப நண்பரான தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது யோகா செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் ஹன்சிகா. அதற்கு நெட்டிசன் ஒருவர், ஆபரேஷன் மூலமாக உடல் எடையை குறைத்துவிட்டு, தற்போது யோகாவால் தான் உடம்பு குறைந்துள்ளதாக ஹன்சிகா பொய் சொல்வதாக கமெண்ட் செய்திருந்தார்.


இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஹன்சிகா, 'நான் என்னுடைய உடலை குறைப்பதற்கு கடினமாக உழைத்து இருக்கிறேன். அதில் யோகாவும் ஒன்று. இதில் நகைசுவை என்னவென்றால், யோகா நேர்மறை என்னத்தை பரப்புவதோடு வெறுப்பை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளார். 


அவரின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் தமிழில் இவரது நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்பினைப் பெறுவதற்காக காத்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement