• Jul 24 2025

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பு- இது தான் காரணமா?- அவரே போட்ட பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழை தாண்டி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கதாநாயகியாக கலக்கியுள்ள குஷ்பு தற்போது, நடிப்பு, திரைப்பட தயாரிப்பை தாண்டி அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே திமுக காங்கிரஸ், போன்ற கட்சிகளில் இணைந்து பணியாற்றிய குஷ்பு தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது. 


மேலும் தற்போது பிரான்சில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாஜக சார்பில், அமைச்சர் எல்.முருகனுடன் இவரும் பிரான்ஸ் சென்றிருந்தார்.இந்நிலையில் குஷ்பு தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் பகிர்ந்துள்ளார். அதில் "எனக்கு மீண்டும் முதுகு எலும்பு பகுதியில் வலி ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்து வருகிறேன். இதில் இருந்து நான் முழுமையாக குணமாகுவேன் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது ரசிகர்கள் குஷ்பு விரைவில் குணமடைய ஆறுதல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் குஷ்பு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி பங்குபற்றி வருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement