• Jul 24 2025

தற்கொலை செய்து கொண்ட சிம்ரனின் உடன் பிறந்த தங்கை.. இத்தனை படங்களில் நடித்துள்ளாரா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

90கால கட்டத்தில் இளஞர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகையாக இருந்தவர் சிம்ரன். இவரை ரசிகர்கள் 'இடுப்பழகி' என செல்லமாக அழைத்து வந்தனர். விஜய், அஜித், பிரசாந்த் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார்.


இவ்வாறு உச்ச நடிகையாகத் திகழ்ந்து வந்த சிம்ரன் இப்போது கிடைக்கும் ரோல்களில் மட்டுமே நடித்து வருகின்றார். அதுமட்டுமல்லாது சென்னையில் பிரபல ரெஸ்டாரன்ட் ஒன்றினைத் தொடங்கி நடத்தி வருகின்றார். 


சிம்ரனின் தங்கை தான் நடிகை மோனல். அதாவது உடன் பிறந்த சகோதரி ஆவார். மோனல் தமிழில் 'பார்வை ஒன்றே போதுமே, பத்ரி, லவ்லி, சமுத்திரம்'  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இவரின் திறமையை வியந்து கதாநாயகியாக நடிப்பதற்கு நல்ல பட வாய்ப்புகள் தேடி வந்த நேரத்தில் 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு காதல் தோல்வி காரணம் என திரையுலகில் கூறப்பட்டது.


எது எவ்வாறாயினும் இவரின் இழப்பு இன்றுவரை திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகவே பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement