• Jul 24 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளைத் திருடியது இவரா..? உடனடியாக கைது செய்த போலீஸ்... பரபரப்பில் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் ஒன்றினை அளித்தார். 


அந்தப் புகாரில் அவர் கூறுகையில், 2019-ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகையானது நாங்கள் மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. அதாவது சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என அப்புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த மாதம் அளித்த புகாரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடுபோனது தொடர்பாக அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி (40) என்பவரை போலீசார் இன்று உடனடியாக கைது செய்துள்ளனர். அதாவது ஈஸ்வரியின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடி இருப்பது உறுதி செய்யப்பட்டாதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ஈஸ்வரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வீட்டில் பணி புரிந்த வேலைக்காரி தான் நகைகளை திருடியுள்ளார் என்பது திரையுலகில் பலரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement