• Jul 24 2025

பிரபல மலையாள நடிகை சானியாவை மாநகரம் திரைப்பட ஸ்ரீ திருமணம் செய்து விட்டாரா?- வெளியாகிய wedding photos

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் ஸ்ரீ. இதனைத் தொடர்ந்து  ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்படி, வில் அம்பு, போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றார். இருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தியது மாநகரம் திரைப்படம் தான்.

இதனைத் தொடர்ந்து பெரிதாக படவாய்ப்புக்கள் கிடைக்காததால் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இருப்பினும் இந்த நிகழ்ச்சியிலிருந்து 4ம் நாளே வெளியேறினார்.இந்த நிலையில் இவர் பிரபல மலையாள நடிகை  சானியா ஐயப்பனுடன் சேர்ந்து திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதைப் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய லேட்டஸ்ட் கிரஷ் இவ்ளோ சீக்கிரமாக திருமணம் செய்துக் கொண்டாரா? அதுவும் நடிகர் ஸ்ரீயையா என புலம்பி வருகின்றனர். ஆனால், இது ஒரு புதிய படத்துக்கான போட்டோ ஷுட் என்பதும் முக்கியமாகும்.


இவர்கள் இருவரும் இணைந்து இறுகப்பற்று படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள திருமண காட்சி தான் அந்த ஸ்டில் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதே படத்தில் இருவரும் ஆபிஸ் லிப்டில் செல்லும் ஒரு புதிய ஸ்டில்லும் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement