• Jul 24 2025

புடவைக்காக என் சொத்தையே இழந்திட்டேனே?- புலம்பித் தள்ளிய எதிர் நீச்சல் சீரியல் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

கானா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஹரிப்பிரியா..இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விஷ்ணு நடித்திருந்தார். இதனை அடுத்து ஷு தமிழில் ஒளிபரப்பான மேற்கு மாப்பழத்தில் ஒரு காதல் என்னும் சீரியலில் கதாநாயகனாக நடித்தார். 

இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த விக்னேஷ் சிவன் என்பவரைக் காதலித்து திருணம் செய்து கொண்டார்.இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த கொஞ்ச காலத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.


இதனை அடுத்து ஹரிப்பிரியா நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். இதுவரைக்கும் சுமார் 20 சீரியல் நடித்து இருக்கிறாராம். அதிலும் அதிகமான சீரியல்கள் சன் டிவியில் தான் நடித்திருக்கிறார். தற்பொழுது எதிர் நீச்சல் சீரியலில் நந்தினி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இதில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளிக் குவித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.தற்போது இவர் சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.


ஏற்கனவே பல பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் அவர்களது லிஸ்டில் ஹரிப்பிரியாவும் இணைந்துள்ளார். 500 ரூபாய், 700 ரூபாய் அளவில் பார்த்து அசந்து போய் உள்ளார்.இது தெரியாம புடவைக்காக என் சொத்தையே இழந்து இருக்கேன் என புலம்பி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement