• Jul 25 2025

பாலிவூட் சினிமாவின் மூத்த நடிகர் திடீர் மரணம்- இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் மற்றும் மராத்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் பழம் பெரும் நடிகர் ஜெயந்த் சவார்கர். கிட்டத் தட்ட 60 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தானேவில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் இவரது  உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


இருப்பினும் இன்று காலை 11 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஜெயந்த் சவார்கர் உடலுக்கு இறுதி சடங்குகளாக நாளை நடைபெற  தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement