• Jul 25 2025

நடிகை சமந்தாவின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா? அழகிய புகைப்படம் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் முதலில் கால் பதித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா.இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை பல வருடங்களாக காதலித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து செய்தது ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

டாப் நாயகிகள் லிஸ்ட் எடுத்தால் இவர் டாப்பில் இருக்கிறார். சமந்தா தெலுங்கில் நடித்துள்ள சகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. புராண கதையில் நடித்துள்ள சமந்தாவின் நடிப்பை பார்க்க ரசிகிர் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

Myositis என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா கடந்த சில மாதங்களாக அந்த நோயின் தாக்கத்தால் வெளியே அவ்வளவாக வரவில்லை.

தற்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் இணைய இருக்கிறார், அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துவந்த குஷி என்ற படத்தில் இணைய இருக்கிறாராம்.

தற்போது சமந்தா முதல் திருமணத்தின் போது சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


Advertisement

Advertisement