• Jul 25 2025

மனைவியை கழிவறைக்கு செல்ல விடாமல் கொடுமைப்படுத்திய ரஜினி பட வில்லன்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நவாசுதீன் சித்திக். அத்தோடு இவர் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திலும் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர்.


இவரது மனைவி ஜைனப் என்ற ஆலியா சித்திக். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்க்கையில் புயல் வீசியது போல பல சச்சரவுகள் கிளம்பத் தொடங்கின. அந்தவகையில் கடந்த 2021 இல் நவாசுதீன் தன்னுடைய மனைவிக்கு வாட்ஸ்அப்பில் விவாகரத்து செய்தியினை வழங்கினார். 


இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அலியா மீது நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெகருனிசா போலீசில் அளித்த புகாரின் பேரில் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதாவது அலியா தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாக அப்புகாரில் அவர் தெரிவித்து இருந்தார். 


இதனையடுத்து அலியா பதில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிடுகையில் "தனக்கு உணவு கொடுக்காமலும், கழிவறைக்கு செல்ல விடாமலும் நவாசுதீன் சித்திக்கும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்துகின்றனர்" என்று வேதனையளிக்கும் வகையில் தெரிவித்து இருந்தார். 


அலியாவின் வக்கீலும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். அதுமட்டுமல்லாது தன்னையும் அலியாவை சந்திக்கவிடவில்லை என்றும் அவர் கூறினார். அத்தோடு கணவன் வீட்டுக்கு சென்றவர் மீது அத்துமீறி நுழைந்ததாக வழக்கு தொடர்வது முறையான விடயமல்ல என்றும் தெரிவித்தார்.


இந்த நிலையில் அலியாவினுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதில் அளிக்கும்படி நவாசுதீன் சித்திக்குக்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் ஒன்றினை அனுப்பி உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement