• Jul 25 2025

நடனப்புயல் பிரபுதேவாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- திடீரென வைரலாகும் வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் நடன இயக்குநராக அறிமுகமாகி தற்பொழுது நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் பிரபு தேவா.

இவர் போக்கிரி ,வில்லு எனப் பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். சில காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த இவர் தற்பொழுது ரி என்ட் ரி கொடுத்து மீண்டும் நடித்து வருகின்றார்.நடனம், நடிப்பு, இயக்குநர் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என கலக்கிய பிரபுதேவா இப்போதும் நிறைய படங்கள் நடிக்கிறார். அத்தோடு கடைசியாக பிரபுதேவா நடிப்பில் பொய்க்கால் குதிரை என்ற படம் வெளியானது.


 அண்மையில் மலையாள படமாக ஆயிஷா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு இவர் நடனம் அமைக்க அப்பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகின்றது.

அத்தோடு பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் பிரபல நடன இயக்குனர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். முதன்முறையாக பிரபுதேவா தனது பெற்றோர்களை பாலிவுட் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது பிரபு தேவா ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement