• Jul 24 2025

இப்பவும் சொல்லுறேன் விஜய் தான் நம்பர் 1.. மீண்டும் சர்ச்சையில் சிக்குவாரா தில் ராஜு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணிக் ஹீரோவான விஜய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படமானது வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நஷனல் க்ரஸ் ராஷ்மிகா நடித்துள்ளார். 


இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுக்க உள்ளார். மேலும் வாரிசு படம் தெலுங்கிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளதால், அங்குள்ள ஊடகங்களில் தில் ராஜு புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். 

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் அளித்த பேட்டி ஒன்றில் "தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகர்" என கூறி இருந்தார். இவர் இவ்வாறு கூறியதைத் தொடர்ந்து பல எதிர்ப்புகளும் கிளம்பி இருந்தன. அதேபோல் கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமாக நடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தில் ராஜு பேச மேடை ஏறிய போது ரசிகர்கள் "நம்பர் 1, நம்பர் 1" என கத்தி ஆரவாரம் செய்தனர். 


இதனால் உற்சாகம் அடைந்த தில் ராஜு ரசிகர்களுடன் சேர்ந்து நம்பர் 1 என கத்தி அவர்களை உற்சாகப்படுத்தினார். இதையடுத்து பேசும்போதுகூட விஜய் தான் சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் விஜய்யை நம்பர் 1 என சொல்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது திரையரங்கு மூலம் வரும் கலெக்‌ஷனை வைத்து தான் யார் நம்பர் 1 என்பது தீர்மானிக்கப்படுகிறது.

அப்படி பார்த்தால் விஜய்யின் கடைசி 5, 6 படங்கள் திரையரங்கு மூலம் மட்டும் ரூ.60 கோடிக்கு அதிகமாக ஷேர் கொடுத்துள்ளன. வேறு எந்த நடிகருக்கும் இந்த அளவு கிடைக்கவில்லை. படம் வெற்றி அடைகிறதோ, தோல்வி அடைகிறதோ அதன் வசூல் தான் முக்கியம் என தில் ராஜு விளக்கம் அளித்துள்ளார். 


இதன் மூலமாக அவர் விஜய் தான் நம்பர் 1 என்பதை சூசகமாக கூறி உள்ளதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவரின் இந்த பேச்சு தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement