• Jul 25 2025

அடடே நீயா நானா புகழ் கோபிநாத்தின் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- அவரே வெளியிட்ட சூப்பர் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி முடிவடைந்தாலும் விஜய் டிவியில் 15 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டு ஷோ தான் நீயா நானா. விவாத மேடையாக இருபக்கமும் இருக்குழுக்களாக மக்கள் பிரிந்திருப்பார்கள்.


இவர்கள் ஒரு தலைப்பினைக் கொண்டு எது சரி எது பிழை என்ற வகையில் வாதாடுவார்கள். இதனை நடுவராக இருந்து கோபிநாத் என்பவர் சரியான தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் கோபிநாத் காணப்படுகின்றார்.

மேலும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளருக்கு பெரிய பொறுப்பு உள்ளது, நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்த வேண்டும், வந்த விருந்தினர்களை ஆக்டீவாக பதில் சொல்ல வைக்க வேண்டும், காதில் ஒருவர் கூறுவதையும் கவனிக்க வேண்டும்.

இப்படி பல விஷயங்களை தொகுப்பாளர்கள் செய்ய வேண்டும். அப்படி ஒரு சிறந்த தொகுப்பாளராக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர் தான் கோபிநாத்.விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் நீயா நானா நிகழ்ச்சி இவருக்கு பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தி தந்தது. இப்போது இந்நிகழ்ச்சியை மட்டும் விடாமல் நடத்தி வருகிறார்.


அதேசமயம் இன்ஸ்டாவிலும் நிறைய விஷயங்கள் குறித்தும், கருத்தும் தெரிவித்து வருகிறார். அப்படி ஒரு பதிவில் அவர் தனது அம்மா புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட அட இவர்தான் உங்களது அம்மாவா என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement