• Jul 26 2025

சீரியல் நடிகை ஷபானாவின் அண்ணாவை பார்த்துள்ளீர்களா...அதுவும் இந்த பெரிய நடிகரா..வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்களிடத்தே பிரபலமானவர் சின்னத்திரை கதாநாயகி ஷபானா.

இவர் கடந்த ஆண்டு சீரியல் நடிகர்  நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


இவ்வாறுஇருக்கையில் நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஷபானாவும் சென்றுள்ளார்.

நடிகை ஷபானா விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். அத்தோடு பல தடவை விஜய்யை தனது அண்ணா என  பல இடங்களில் அவரே கூறியுள்ளார்.


இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யுடன் நடிகை ஷபானா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டு “கடைசியில் கனவு நினைவாகிவிட்டது ..அண்ணனே பாத்திட்டேன் 😍😍😍😍😍 நேற்று நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது ✨ அதனால் நான் அதை என்றென்றும் என்னுடன் வைத்திருக்கிறேன் ❤️அவரை பார்த்ததிற்கு அப்புறம் அவர் மேல இருக்கிற அன்பும் மரியாதையும் 100 மடங்கு அதிகமாகிட்டுது..அவ்வளவு தான் சொல்லுவேன்...லவ் யு அண்ணா..என வெளியிட்டுள்ளார்”.


தன்னுடன் கூட பிறக்காவிட்டாலும் ஒரு ரசிகை என்ற ரீதியில் அவரை அண்ணாவாக நினைத்து இப்படி பாசம் வைத்துள்ளீர்களே சூப்பர் என பல ரசிகர்கள் கெமண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement