• Jul 26 2025

இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை நயன்தாராவை சிறுவயதில் பார்த்திருக்கின்றீர்களா?- வாவ்.... ரொம்ப கியூட்டாக இருக்கிறாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் விக்னேஷ் சிவன், நானும் ரெளடி தான் படத்தை இயக்கியபோது அவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்துவந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து திருமணம் முடிந்த 4 மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது இந்த ஜோடி. பின்னர் தான் அவர்கள் இருவரும் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.


தொடர்ந்து கெரியரில் பிஸியாக இருந்து வரும் நயன்தாரா அவ்வப்போது தனது கணவருடன் பிரபல கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அண்மையில் கூட இவர்கள் குல தெய்வம் கோயிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வந்தன.

இந்நிலையில் தற்போது பிரபல முன்னணி நடிகையின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை நடிகை நயன்தாரா தான். இவர் தனது அழகான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.


இவரை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement