• Jul 25 2025

தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலும் உன்னை தேரிலே வைப்பேனே- பிச்சைக்காரன் 2 படத்தின் கோயில் சிலையே பாடல் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நான், பிச்சைக்காரன், கொலைகாரன், சலீம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்ட நடிகர் தான் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் தற்பொழுது பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது.

இப்படத்தின் முதல் பாகத்தை சசி இயக்கிய நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி உள்ளதோடு, அப்படத்தை தயாரித்தும் உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் மலேசியாவில் பாடல் காட்சி ஒன்றை படமாக்க முடிவெடுத்து அங்கு சென்று அதற்கான படப்பிடிப்பு நடத்தியபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் விஜய் ஆண்டனி.


இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு கட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். இதன்பின்னர் பிச்சைக்காரன் 2 படத்தை ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்து அதற்கான வேலைகளிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தார். 

இந்த நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலும் உன்னை தேரிலே வைப்பேனே கண்ணே என்னும் பாடல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement