• Jul 25 2025

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கிய குறும்படத்தைப் பார்த்திருக்கின்றீர்களா?- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானதை அடுத்து தற்போது அவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

லியோ படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போதே விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படத்தின் இயக்குநர் யார் என பேச்சு அடிபட தொடங்கிவிட்டது. அதன்படி இயக்குநர் அட்லி தான் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளதாக பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றது.


மேலும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கடந்த ஆண்டு சினிமா துறையை சார்ந்த படிப்பை முடித்தார்.இவர் இதற்கு முன்பு சில குறும்படங்கள் இயக்கி இருந்தாலும் சமீபத்தில் pull the trigger என்ற குறும்படத்தை இயக்க போவதாக கூறப்பட்டது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி வைரலானது.இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கிய pull the trigger குறும்படம் வெளியாகியுள்ளது.இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவிதது வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement