• Jul 24 2025

பொன்னியின் செல்வனைப் பின்னுக்குத் தள்ளியதா 'யாத்திசை'... ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சமர், ஜமீல், சுபத்ரா, வைதேகி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'யாத்திசை' திரைப்படமானது இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பல கோடி பட்ஜெட்டில் உருவாகி 'பொன்னியின் செல்வன்' போன்ற படங்கள் வசூலை வாரிக் குவித்து வந்த இந்த நேரத்தில், குறைவான பட்ஜெட்டிலும் வரலாற்று படங்களை தரமாக சொல்ல முடியும் என்கிற முயற்சியை இப்படத்தின் வாயிலாக மேற்கொண்டுள்ளார் இயக்குநர் தரணி ராசேந்திரன்.


ரிலீசுக்கு முன் அப்படக்குழு வெளியிட்ட டிரைலர், டீசர் முதல் ஸ்னீக் பீக் வீடியோ வரை அனைத்துமே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த வண்ணம் இருந்தன. மேலும் பாண்டிய மன்னனான ரணதீரனுக்கும், எயினர்களுக்கும் இடையேயான போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் யாத்திசை.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்ட வண்ணமே இருக்கின்றனர். 


அந்தவகையில் ஒரு நெட்டிசன் குறிப்பிடுகையில் "7 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை. நன்கு ஆராயப்பட்ட, சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள ஒரு சரித்திர படம் இது. குறிப்பாக இரண்டாம் பாதி உங்களை மிகவும் கவரும். தொழில்நுட்பரீதியாக சிறந்து விளங்கும், இந்த திரைப்படம் உங்கள் நேரத்திற்கும் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கும் ஒர்த்தானது. வெறும் 2 மணிநேர படம் தான். அதில் வரும் சிறப்பான ஆக்‌ஷன் மற்றும் போர் காட்சிகள் ஆகியவை படத்திற்கு பெரிய பிளஸ். புதிய நடிகர் பட்டாளத்தை வைத்து இப்படி ஒரு படத்தைத் தயாரித்த குழுவினருக்கு பாராட்டுகள்" என பாராட்டி பதிவிட்டுள்ளார்.


மேலும் மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், "யாத்திசை படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். படம் வெறித்தனமாக இருக்கிறது. இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


இன்னொருவர் "யாத்திசை - சம்பவம் என குறிப்பிட்டு பேசாம பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை தள்ளிவைத்து விடுவது நல்லது என பதிவிட்டு படம் வேறலெவலில் இருப்பதாக" கூறி பாராட்டி உள்ளார்.


இவ்வாறான விமர்சனங்களை பார்க்கும் போது யாத்திசை திரைப்படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும் என்பது தெரிகின்றது.

Advertisement

Advertisement