• Jul 23 2025

திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்கள்டா- சிக்னலை மதிக்காமல் சென்ற நடிகர் விஜய்யின் கார்

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படத்தின் விஜய் போர்ஷன் ஷூட்டிங் நிறைவு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.இதனை அடுத்து தளபதி 68 படத்தின் பூஜையில் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னதாக தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்தித்தார் விஜய். என்ட்ரி பாஸ் இல்லாத கார்கள் இந்த இடத்தில் நிற்கக் கூடாது என்பது முதல் நிகழ்ச்சிக்கு யாரெல்லாம் வரவேண்டும், நிகழ்ச்சி ஏற்பாடுகள் எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை புஸ்ஸி ஆனந்தே களத்தில் இறங்கி வேலை பார்க்கும் காட்சிகள் வீடியோக்களாக வெளியாகி உள்ளன. 


விஜய் காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்குள் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசிய விஜய் தான் அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறியதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.ஏற்கனவே இது பற்றிய தகவல் வந்திருந்தாலும் விஜய்யே தனது ரசிகர்கள் முன்பு இப்படி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இந்த நிலையில் தற்பொழுது விஜய் மீது ஒரு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனர். அதாவது நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பனையூர் அலுவலகத்திற்கு சென்ற விஜய்யின் கார் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த போதும் நிற்காமல் சென்றது என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement