• Jul 24 2025

கிழக்கு வாசல் சீரியலில் எஸ்.ஏ.சந்திரசேகர் காரெக்டரில் நான் தான் நடிக்க இருந்தேன்- உண்மையை உடைத்த மாரிமுத்து

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு வந்தவர் மாரிமுத்து. பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் உள்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ள இவருக்கு இயக்குநராக பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததன் காரணமாக தற்போது முழுநேர நடிகராக களமிறங்கி கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

 ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சீரியலிலும் மாஸ் காட்டி வருகிறார்.குறிப்பாக திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் இப்ப விஜய் டிவியில் கிழக்கு வாசல்னு ஒரு ஒரு சீரியல் வரப்போகுது. அது சம்சாரம் அது மின்சாரம் மாதிரியான கதை. விசு கதாப்பாத்திரம் மாதிரின்னு சொல்லி நான் ஜெயிலர் ஷுட்டிங்ல இருக்கும் போது ராதிகா மேடமே எனக்கு போன் பண்ணி கேட்டிருந்தாங்க.


அந்த சீரியல் பண்ண முடியாதுங்கிற சூழல் வந்திடுச்சு.அதுவும் பெரிய காரெக்டர் தான் அதுக்குப் பிறகு தான் அந்தக் கேரக்டரை இப்ப எஸ்.ஏ.சந்திரசேகர் சார் பண்றார் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement