• Jul 25 2025

மூன்று வருஷம் பின்னாடி வந்தாரு,நான் நோ சொல்லிட்டேன்- தன் காதல் கதை குறித்து பேசிய ரம்யா பாண்டியன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஓவர் நைட்டில் சோசியல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை ரம்யா பாண்டியன். தனது வீட்டு மொட்டைமாடியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட்டை ரம்யா சோசியல் மீடியாக்களில் பதிவிட்ட சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்கவைத்துவிட்டார். 

மேலும் இவர் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.தொடர்ந்து விஜய்  டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 ல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார். 


தொடர்ந்து தற்பொழுது படவாய்ப்பினைப் பெற்றும் நடித்து வருகின்றார்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய ரம்யா பாண்டியன், நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவர் என்னை பார்ப்பதற்காக பேருந்து நிலையத்தில் பார்த்து கொண்டு இருப்பார். 


நான் கல்லூரிவிட்டு திரும்பி வரும் போதும் நின்று கொண்டு இருப்பார். இந்த மாதிரி மூன்று வருடம் என்னை அவர் பாலோ செய்து கொண்டே வந்தார்.ஆனால் கடைசியில் ஒரு நாள் என்னை ப்ரொபோஸ் செய்து விட்டார். அதுக்கு நான் முடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என்று கூறியதாக ரம்யா பாண்டியன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement